கோவையில் சாலையோரம் நிறுத்திய கார் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை ராம்நகரை சேர்ந்த சிவா என்பவர், தனது மாருதி 800 காரை கோகலே தெருவில் சாலையோரம் நிறுத்தி சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கார் திருடப்பட்டதை அறிந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை ராம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவா (வயது41). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது தந்தை உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவர மாருதி 800 காரை பயன்படுத்திவந்துள்ளார்.

வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வந்த சிவா, கோகலே தெருவில் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டுவிட்டு காரை எடுக்கலாம் என்று வந்து பார்த்தபொழுது கார் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் TN01 U2507 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் என்னைக் கொண்ட வெள்ளை நிற மாருதி 800 கார் மர்ம நபர்கள் திருடி விட்டதாக சிவா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...