கோவை பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் தமிழக - கேரளா பொறுப்பாளர் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக குனியமுத்தூரை சேர்ந்த முகமது ஷபி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய உள்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவைப்புதூரில் கடந்த செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் தமிழக - கேரளா பொறுப்பாளர் ஆனந்த கல்யாணராமன் என்பவரது வீட்டு முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவி ஆணையர் ரகுபதி ராஜா, ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது ஷபி (வயது29) என்பவரை குனியமுத்தூர் செல்வம் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று தனிப்படையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முகமது ஷபி, அடிக்கடி வீட்டை மாற்றிக்கொண்டு தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற அமைப்புகளில் உறுப்பினராக இல்லை. ஆனால் ஆதரவாக செயல்பட்டுள்ளார், என்று தெரிவித்தனர்.

கைதான முகமது ஷபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...