மகளிர் தின கொண்டாட்டம் - கோவையில் பெண் காவலர்களுக்கு பிசியோதெரபி ஆலோசனை!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்காக, கோவை காவல் ஆணையர் அலுவலக நடத்தப்பட்ட வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கினை துணை ஆணையர் சுகாசினி தொடக்கி வைத்தார்.



கோவை: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான "வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு" கோவை காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தொடங்கி வைத்தார்.



இதில், வலி வருவதற்கான காரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், வலி வராமல் தடுக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக பணியில் உள்ள பெண் காவலர்கள் சில நேரங்களில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழலில் உடல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தன்று பிசியோதெரபி சிகிச்சை விழிப்புணர்வு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...