கிணத்துக்கடவு அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் - டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்து

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முள்ளுபாடியில் பணி முடித்து வீடு திரும்பிய டாஸ்மாக் ஊழியர் நாகமாணிக்கம் என்பவரை வழிமறித்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியால் தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகமாணிக்கம் (வயது40). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் பணி முடித்து இரவு 11 மணி அளவில் நாகமாணிக்கம் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து பிரதான சாலைக்கு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் நாகமணிக்கத்தை பின்தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் அவரை வழி மறித்து மிரட்டி கத்தியால் குத்தியுள்ளனர்.

நாகமாணிக்கத்தின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். காயங்களுடன் இருந்த நாகமாணிக்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...