திரிபுரா மாநில பாஜகவுக்கு கண்டனம் - உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை காரணமாக வைத்து பாஜக கட்சினர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீதும் CPI(M)கட்சிஅலுவலகம் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டிச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன்,



மாவட்ட குழு உறுப்பினர்கள் அ.பஞ்சலிங்கம், ஆர்.வி வடிவேல், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், CPI(M)மடத்துக்குளம் தாலுக்கா பொறுப்பாளர் எம் எம் வீரப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வி. ராஜரத்தினம் தோழன்ராஜா, வசந்தி ஜஹாங்கீர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...