திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் - பாஜகவை கண்டித்து தாராபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கும் பாஜக, ஆத்திரத்தின் உச்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



பாஜகவின் காட்டுமிராண்டி தனமான இந்த தாக்குதலை கண்டித்து, தாராபுரம் அண்ணாசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுச்சாமி தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, கோவிந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...