தாராபுரம் பிஷப் கல்லூரியில் மகளிர் தின விழா - நர்சிங் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரெய்னிங் ஸ்கூல் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிஷப் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி நர்சிங் மாணவிகள் மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரைனிங் ஸ்கூல் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் சினேகா தலைமையில் இந்த மகளிர் தின விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர் மன்ற உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்து பேசினர்.



இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...