சென்னையில் மதிமுக சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் - வைகோ, துரை வைகோ பங்கேற்பு

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ரோஹையா தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சென்னை: எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ரோஹையா தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ரோஹையா தலைமையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ,பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் துணைவியார் ரேணுகாதேவி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் உள்ளிட்ட ஏராளமான தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மகளிர் தின கொண்டாட்டத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் வைகோவிற்கு பூங்கொத்து கொடுத்து மாநில மகளிர் அணி செயலாளர் ரோஹையா வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவில் வைகோ பேசியதாவது:

தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சாவித்ரிபாயின் சரித்திரத்தை துரை வைகோ பேச்சால் அறிந்திட முடிந்தது. சாவித்ரி பாய்க்கு வீரவணக்கம். பெண்கள் அடிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தந்தை பெரியார் பெண் உரிமைக்காகப் பாடுபட்டார்.

பெண் சொத்துரிமையை வலியுறுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்களுக்குச் சொத்துரிமையில் சமபங்கு அளித்தார்.

அதன்வழியில் முதல்வர் ஸ்டாலின் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீதம், புதுமைப்பெண் திட்டம் என பலநல்ல திட்டங்களைத் தீட்டி வருகிறார்.

இருந்தபோதிலும் பெண்களை மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைப்பது உள்ளிட்ட பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தோள் சீலை போராட்டம் 200 ஆண்டு நிறைவு விழாவில் கேரள முதல்வர் பிரனாய் விஜயனும், முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டனர். பெண்கள் மனத் துணிச்சலோடு அன்று போராடினார்கள். அதனால் தான் வெற்றி கிடைத்தது.

தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு போராட்டம் உள்ளிட்ட தமிழக நலன்களுக்குப் போராடும் குடும்பமாகத்தான் நாங்கள் இதுவரை இருந்து வருகிறோம். மகளிருக்கு உரிமை வேண்டும். பெண்களுக்குப் படிப்பறிவு. பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். மதிமுகவைச் சார்ந்த பெண்கள் பல்வேறு போராட்டங்களில் உரிமைகளைப் பெறப் பல இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள், என்றார்.

பின்னர் மல்லை சத்யா பேசியதாவது:

வருங்கால வரலாற்றில் மதிமுக மகளிரணி மிகப்பெரிய இடத்தை பெரும் நிகழ்கால அரசியல் வரலாற்றில் மதிமுக மகளிர் அணி சாதித்தது போல் வேறு யாரும் சாதித்ததில்லை. Dam 99 திரைப்பட எதிர்ப்பு போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்தவர்கள் மதிமுக மகளிர் அணியினர்.

மகளிர் அணியின் போராட்ட வரலாறு இந்தியா மட்டுமின்றி லண்டனில் வெளியான புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளது. மதிமுக மகளிர் அணியினர் தலைவர் வைகோ அவர்கள் மீது அளவற்ற அன்பை வைத்திருப்பவர்கள்...உலக மகளிர் தின இந்நாளில் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மதிமுக மகளிர் அணி செயலாளர் ரோஹையா பேசுகையில், தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மதிமுக தீர்மானிக்கிறது. தேர்தல் வந்தால் பணம் கொடுத்து வெற்றி பெறுவது பிற அரசியல் கட்சிகள். ஆனால் மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்கள் நடத்தி ஐந்தாண்டுக் காலம் சிறையிலிருந்தவர் வைகோ. எதிர்காலத்தில் வைகோவின் வழிகாட்டுதல் படி துரை வைகோ தலைமையில் கட்சியை வளப்படுத்துவோம், என்றார்.

துரை வைகோ பேசுகையில், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவது, மகளிரின் திறன்களை அங்கீகரிப்பதும் தான் மகளிர் தினத்தின் நோக்கம். பெண் பிள்ளை திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான் பெற்றோருக்கு உள்ளது. ஆனால் ஆண்களுக்குக் கொடுக்கும் கல்வி வேலைக்குச் செல்லும் முக்கியத்துவம் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். திராவிட இயக்கங்களில் சமூகநீதி பேசும் எத்தனை பேர் கலப்பு திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...