கோவையில் என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட ரவுடி கவுதம் - சென்னை நீதிமன்றத்தில் சரண்!

கோவையை சேர்ந்த பிரபல ரவுடியான கவுதம், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் பயத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சென்னை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார். அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


கோவை: என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த பிரபல ரவுடி கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரவுடி கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரவுடி கவுதம் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அவரை பிடிக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கவுதமின் மனைவி மோனிஷா (21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (28), மோனிஷாவின் மாமியார் (48) ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மோனிஷா கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி கவுதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னை சுட்டு பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர்.

என்னை என்கவுண்டர் செய்ய போவதாக, போலீசாரே என்னிடம் தெரிவித்தனர். நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள். எனக்கு தீர்வு வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...