கோவை மத்திய சிறை கைதிகள் நலன் கருதி மேலும் ஒரு பெட்ரோல் பங்க் திறக்க திட்டம்!

கோவை மத்திய சிறை கைதிகள் நலனுக்காக நஞ்சப்பா சாலையில் செயல்பட்டு பெட்ரோல் பங்க் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே மற்றொரு பெட்ரோல் பங்கை திறக்க சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிறைத்துறை சார்பில் 2வது பெட்ரோல் பங்கை திறக்க திட்டமிடப்பட்டு வருவதாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள மத்திய சிறையில் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சிறை அங்காடியும் தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்கில் சிறை கைதிகள் 30 பேரும், அலுவலர்கள் 10 பேரும், சிறை அங்காடியில் 4 பேரும் வேலை பார்க்கின்றனர். சிறை நிர்வாகம் சார்பில் கைதிகள் நலன் கருதி நடத்தப்படும் பெட்ரோல் பங்க் என்பதால் வாகன ஓட்டிகள் பலர் விரும்பி வந்து பெட்ரோல் பிடிக்கின்றனர்.

இதற்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த சிறை நிர்வாகம் 2வது பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழையும் இடத்துக்கு அருகே பாரதியார் சலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, மற்றொரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இதுகுறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறியதாவது, டாக்டர் நஞ்சப்பா சாலையில் சிறை நிர்வாகம் நடத்தும் பெட்ரோல் பங்க் தான் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பங்குகளின் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.

சுத்தமான பெட்ரோல் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.

பாரதியார் சாலையில் புதிதாக தொடங்கப்படும் பங்க் மூலம் கைதிகள் 30 பேருக்கும், அலுவலர்கள் 10 பேருக்கும் வேலை கிடைக்கும். இதில் வேலை பார்க்கும் கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களின் குடும்பத்தினரும் பயன் பெறுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...