காரமடை அரங்கநாதர் கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.5 லட்சம் வசூல்!

கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற மாசிமக தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், நேற்று ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4,52,798 வசூலாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில் நேற்று ஒருநாளைக்கான உண்டியல் காணிக்கையாக ரூ.4.5 லட்சம் வசூலாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பாண்டின் தேர் திருவிழாவானது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து எம்பெருமான் தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தண்ணீர் சேவை, பந்த சேவை எடுத்து வந்து திருக்கோவிலின் 4 ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் காரமடை அரங்கநாதர் கோவிலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

மேலும் சில பக்தர்கள் அருள் வந்து ஆட்டம் ஆடிய படியே சவுக்கால் அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தேரோட்ட நிகழ்வின் போது அன்று காலை முதல் நேற்று காலை வரை ஒரு நாளில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.4,52,798 பணத்தினை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதனால் கோவிலுக்கு சுமார் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...