பல்லடம் அரசுக் கலை கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் முனியன், சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பிலிப்ஸ், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சமூகத்தில் பெண் விடுதலை குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி மாணவிகளிடையே பேசினர்.



இதன் தொடர்ச்சியாக நடனம் நிகழ்ச்சி, மாணவிகளின் பேச்சு என பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...