கோவையில் பெண்ணை மிரட்டும் வாடகை டாக்சி ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ காட்சிகள்!

கோவை - திருச்சி சாலையில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மீது வாடகை டாக்சி மோதிய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது வாடகை டாக்சி ஓட்டுநர் அந்த பெண்ணை மிரட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: கோவை - திருச்சி சாலை மேம்பாலத்தில் பெண் ஒருவர் வாடகை டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை - திருச்சி சாலை மேம்பாலத்தில் இன்று காலை பெண் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்சி அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் அந்த கார் லேசாக சேதமடைந்தது.

இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்திவிட்டு வாடகை டாக்சி ஓட்டுநரிடம் இதுகுறித்து முறையிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த டிரைவர் கத்தியை எடுப்பது போல பாவனை செய்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.

இதனால், அச்சம் அடைந்த அந்த பெண், கத்தியை காட்டி மிரட்ட பார்க்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுநர், உன்னை குத்தாமல் விட்டேனே என்று சந்தோஷப்பட்டுக்கொள், என்கிறார். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் கார் விபத்து தொடர்பாக வழக்கு ஏதும் வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும் கார் சேதமடைந்ததற்கு வாடகை டாக்சி ஓட்டுநர், அந்த பெண்ணிற்கு இழப்பீட்டு தொகையாக 10 ஆயிரம் கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை - திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...