மகளிர் தின விழா - பெண் அலுவலர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட கோவை ஆட்சியர்

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று, பெண் அலுவலர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, ஊரக வளர்ச்சித் துறை மகளிர் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் சௌமியா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...