உடுமலை நீதிமன்றத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் வழக்கறிஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



உடுமலை: உடுமலை நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகத்திறன் போட்டி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன்,



மாவட்ட உரிமையியல் நீதிபதிபாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி. மீனாட்சி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...