கோவை தனியார் கல்லூரியில் மகளிர் தினம் - தனுஷ் பாடலுக்கு பெண் கவுன்சிலர்கள் நடனம்!

கோவை சூலூர் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாணவிகளுடன் இணைந்து திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் தனுஷ் பாடலுக்கு நடனமாடியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொண்டு பெண்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர்களான இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, தனலட்சுமி, தெய்வானை தமிழ்மறை, புஸ்பலதா ராஜகோபால் ஆகியோரும் விருதுகளை பெற்றனர்.



இந்த விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் நடிகர் தனுஷின் திரைப்பட பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...