தாராபுரத்தில் மகளிர் தின சட்டவிழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாமில், நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மகளிர் தின விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.



இந்த மகளிர் தின விழாவில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நீதிபதி பாபு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் கே .கார்வேந்தன், தங்கராஜ், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செழியன், இந்துமதி, தாராபுரம் சார்பு நீதிபதியின் துணைவியார் கௌசல்யா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.



விழாவில் 30 பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.



முன்னதாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டிகள், கோலம் போடுதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...