கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் - கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’ என்று, ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஜமேசா முபின் (வயது29). என்பவர் உயிரிழந்தார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மிகப்பெரிய அளவிலான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக அப்போதே தகவல் வெளியானது. ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக இத்தனை நாள்கள் எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.



இந்த நிலையில் `கோவை கார் வெடிப்பு சம்பவம், மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம்’என ஐ.எஸ் கொராசான் மாகாணம் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது குறித்து அவ்வமைப்பின் ஆதரவு இதழான வாய்ஸ் ஆப் கொரோசான் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் இரண்டு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 200 பேரைச் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து கண்காணித்துவருகிறோம். தற்போது ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதால் அவர்களின் நடவடிக்கையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு உண்மையிலேயே பொறுப்பேற்றிருக்கிறதா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது தகவல் வெளியிட்டிருக்கிறார்களா? என்றும் விசாரித்துவருகிறோம், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...