கோவை சைபர் கிரைமில் முதல் குண்டாஸ் - செல்போன் எண்களை வைத்து மோசடி செய்த நபர் மீது பாய்ந்தது!

கோவையில் நண்பர்களின் செல்போன் எண்களை போர்ட் செய்து பணமோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விக்னேஷ் தன்னுடைய நண்பர்களின் மொபைல் நம்பர்களை போர்ட் செய்து, வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் யாரோ PORT செய்திருக்கின்றனர். அதன் மூலம் கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்று மோசடி நடந்திருக்கின்றன.

இந்த நிலையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தங்கள் நெம்பரை போர்ட் செய்து யாரோ பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சிட்டி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த மோசடி தொடர்பாக மொத்தமாக நான்கு புகார்கள் அடுத்தடுத்து பதிவாகின. அதன் அடிப்படையில் 465, 468, 471, 419, 420 IPC 66C 66D IT Act ல் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் சிவராஜ பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை விக்னேஷ் என்ற நபரை கைது செய்தது.

விக்னேஷ் தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அவர்களின் தொலைபேசி எண்களை போர்ட் (PORT) செய்து, வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது.



இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் பயன்படுத்திய மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள் வாகன உரிமங்கள் கார்கள் 3, empty electronic chipset cards ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சைபர் கிரிமினல் விக்னேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் தரப்பில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் விக்னேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். கோவை சிட்டி சைபர் கிரைமில் மேற்கொள்ளப்பட்ட முதல் குண்டர் தடுப்பு நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...