பொள்ளாச்சியில் மகளிர் தினக் கொண்டாட்டம் - ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய யுவசக்தி நிதியம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு சார்பில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் ஒரு கோடிக்கான காசோலையை, யுவசக்தி அமைப்பு வழங்கியது.



கோவை: என் ஐ ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு விழா டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் என் ஐ ஏ நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையுரை ஆற்றினார். அதில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக முன்னேறி வருகின்றனர் என்றார்.



யுவசக்தி நிதியத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியின் காசோலை யுவசக்தி அமைப்பு மூலம் NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வித்யா செந்தில்குமாருக்கு "யுவசக்தி" எனும் பெருமைக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய வித்யா செந்தில்குமார், CSR செயல்பாடுகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மதுரை, செந்தமிழ் கல்லூரியில் துணை முதல்வர் முனைவர்.ரேவதி சுப்புலட்சுமி சர்வதேச மகளிர் தின விழா பேருரை நிகழ்த்தினார்.



இவ்விழாவில், NIA கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் 5 மாணவிகளுக்கு விருதும், 11 மாணவிகளுக்கு ரூ.2.05 லட்சம் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை திரட்டப்பட்ட ரூ. 85 இலட்சம் நிதியம் இவ்வாண்டு இதுவரை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிதியம் மூலமாக பெறப்படும் தொகையினைக் கொண்டு வருடந்தோறும் பொறியியல் கல்லூரியில் 2 மாணவியர்கள், பாலிடெக்னிக் கல்லூரியில் 2 மாணவியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளில் 3 மாணவியர்கள் என மொத்தம் 7 தகுதி வாய்ந்த மாணவிகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் யுவசக்தி அமைப்பே ஏற்று அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், NIA கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், செயலர் முனைவர் சி.ராமசாமி, யுவசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ருக்மணி ராமசாமி, பள்ளிகளின் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் NIA கல்வி நிறுவனங்களின் மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...