கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு விருது - ஸ்வட்ச் பாரத் மிஷனை சிறப்பாக செயல்படுத்தியதற்குப் பாராட்டு

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பறையில் கியூ.ஆர். கோட் முறையினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்புக்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.


கோவை: சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்துறையின் அமைச்சர் திரு.கே.என் நேரு பங்கேற்று தலைமை வகித்தார்.



அதில், ஸ்வச் பாரத் மிஷன்(Swachh Bharat Mission) 2.0 திட்டத்தில் சமூகக் கழிப்பறை/பொதுக் கழிப்பறையில் கியூ.ஆர் கோடு(Q.R.Code) பயன்படுத்தி உபயோகிக்கும் முறையினை 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்புக்கு, அமைச்சர் கே.என். நேரு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பி.பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...