'இளைய நிலா' பாடல் புகழ் கிட்டார் கலைஞர் சந்திரசேகர் மறைவு - இசை ரசிகர்கள் இரங்கல்!

இசைஞானி இளையராஜாவுடன் முதல் படத்தில் இருந்து பணியாற்றி வந்த, மூத்த கிட்டார் கலைஞரும், இளைய நிலா பாடலின் இசைத்துணுக்குகளை வாசித்து புகழ் பெற்றவருமான கிட்டார் கலைஞர் சந்திரசேகர் (79) மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னை: பிரபல கிட்டார் கலைஞரான சந்திரசேகரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவின் இசையில் வெளியான பல்வேறு பாடல்களில் கிட்டார் மற்றும் கீ போர்டு கலைஞராக பணியாற்றிய பிரபல கிட்டாரிஸ்ட் கலைஞர் சந்திரசேகர் (79) காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் இசைஞானி இளையராஜாவும், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என சொல்லலாம்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் கிட்டார் இசைத் துணுக்குகளை வாசித்து புகழ்பெற்றவர் சந்திரசேகர். இளையராஜாவின் ‘பாடி வா தென்றலே’ மற்றும் ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட பெரும்பாலான ஹிட் பாடல்களுக்கு சந்திரசேகர் கிட்டார் வாசித்துள்ளார்.

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிட்டாரிஸ்டாகவும், கீபோர்ட் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி உள்ளார். இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அன்னக்கிளி படத்தில் இருந்து பணிபுரிந்து வந்த மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...