ஆனைகட்டியில் மகளிர் தின கொண்டாட்டம் - ம.நீ.ம., இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

ஆனைகட்டி அருகே கெம்மனூர் மலைவாழ் பழங்குடி கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் தொடங்கி, சட்ட ஆலோசனை வழங்கப்பட்டன. இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.


உலகம் முழுவதும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. சமூக அக்கறையுடன் சிறந்து விளங்கும் மகளிர், சாதனைப் பெண்கள் உள்ளிட்டோரை அங்கீகரிக்கும் விதமாக, மகளிர் தினத்தன்று விருது வழங்கும் நிகழ்ச்சி, கௌரவிப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நகர்புறத்தில் மகளிர் மேம்பாடு சற்று மேலோங்கி இருந்தாலும், மலைவாழ் பழங்குடிகள் கிராமத்தில் மகளிர் மேம்பாடு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.



இந்த நிலையில், மலைவாழ் பழங்குடி கிராம பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, சமூக அக்கறையுடனான மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் ஸ்பெசல் ஃபோர்ஸ் பிரிவின் சார்பாக இந்த விழா நடத்தப்பட்டது.



கோவை அடுத்த ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ள கெம்மனூர் மலைவாழ் பழங்குடி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி பெண்களுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழ்நாட்டில் முதன் முறையாக, பெண்களுக்கான இலவச சட்ட ஆலோசனை முகாம் ஆரம்பிக்கப்பட்டு, சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளது.



இந்த இலவச சட்ட ஆலோசனை முகாமில், பெண்களின் அடிப்படை உரிமைகள், பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள், பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அது மட்டுமின்றி பெண்கள் அடிப்படை பாதுகாப்பு, மருத்துவ தேவை, சேனிட்டரி நாப்கின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுததப்பட்டது.



இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பழங்குடியினப் பெண்களுக்கு சேலை, நேப்கின், சட்ட ஆலோசனை நகல் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.



மலைவாழ் பழங்குடிகள் கிராமத்து வாழ் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த மகளீர் தினவிழாவில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல செய்தி ஊடகப்பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...