மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி - சிறந்த வங்கிகளுக்கு விருது வழங்கிய ஆட்சியர்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடந்த மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில், சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய வங்கிகளுக்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யாதேவி. ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேளார் அமிர்தபால சுப்பிரமணியம், கனரா வங்கி துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தனா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட மேலாளர்(தாட்கோ)/செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் சுயஉதவி குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான முதல் பரிசும், கனரா வங்கிக்கு இரண்டாம் பரிசும், இந்தியன் வங்கிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.



இதில் மாவட்ட அளவில் சிறந்த வங்கிக் கிளைகளாக இந்தியன் வங்கி மைக்ரோசேட் வங்கிக்கு முதல் பரிசும், கனரா வங்கி மைக்ரோ பினான்ஸ்க்கு இரண்டாம் பரிசும், ராம் நகர் ஐசிஐசிஐ வங்கிக்கு மூன்றாம் பரிசும், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது, இந்த ஆண்டில் 180 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்கான கடன் உதவி வழங்கும் முகாம் வரும் 14ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வை வங்கியாளர்கள் ஏற்படுத்த வேண்டும். இம்முகாமில் பெறப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக கல்விக்கடன் உதவி வழங்க வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுய உதவி குழுக்களுக்கு 1,000 கோடி கடன் இலக்கினை இம்மாத இறுதிக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...