கோவை ஜிஎன் மில்ஸ் அருகே சுப்ரமணியம்பாளையத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.



கோவை: ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும், குப்பைகளைச் சேகரிக்க பிளாஸ்டிக் குப்பை கூடைகளும் வழங்கப்பட்டது.



கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சிக்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மரக்கன்றுகளை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவிகள் நேரு நகரில் நட்டு வைத்தனர்.



தொடர்ந்து சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சாந்தாமணி பச்சைமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். அவிநாசிலிங்கம் கல்லூரியின் ஆசிரியர்கள் சுதா மதி, வள்ளியம்மை, ராதா பிரியா, ஸ்ரீ லட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

மேலும் அபிராமி பவுண்டேஷன் தலைவர் ஐஸ்வரியா தேவ் கலந்துகொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிப் பேசினார். தொடர்ந்து மகளிர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சிறப்பு பரிசுகளும், 15வது வார்டை சேர்ந்த பெண்களுக்குக் குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன. இறுதியில் சுகாதார மேற்பார்வையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...