கோவை தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறு - இருவர் கைது

கோவை சித்திரைச் சாவடி அணை அருகே தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளர்களிடம் ஆபாசமாக செய்கை காட்டி தகராறில் ஈடுபட்ட ஏகனூர் தோட்டத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், முத்துக்குமார் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (25). இவரது நண்பர் முத்துக்குமார் (31) இருவரும் வியாழக்கிழமை கோவை சித்திரைச்சாவடி அணை அருகே குடிபோதையில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அப்பகுதி எதிரே இருந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். குடி போதையில் இருந்த சந்திரபிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களது உடைகளை கழட்டி விட்டு வட மாநில பெண் தொழிலாளர்களை நோக்கி ஆபாசமாக செய்கையை காட்டியவாறு, அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த தருண் பாலாஜி என்ற இளைஞர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்திரபிரகாஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...