கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு - 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ!

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மங்கலூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனிடையே, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பெரோஸ், உமர்பாரூக், அசாரூதீன் உள்ளிட்டோரை கோவை அழைத்துவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாக கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தேசிய முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...