கோவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து - முதியவர் பலி

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த ராமசாமி எனும் முதியவர், கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் மகன் ராமசாமி (வயது80). இவர் தனது வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு இருந்த சாலையை வியாழக்கிழமை இரவு கடக்க முயன்றார்.

அப்போது, அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் ராமசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...