கோவையில் கிரேன் மோதி முதியவர் பலி - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை சிங்கநால்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்துச் சென்ற முதியவர் மருதாச்சலம் மீது அந்த வழியாக வந்த கிரேன் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.



கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (வயது70). இவர் சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பகுதிகளில் ஆடு மேய்த்துவந்தார். இந்த நிலையில், இவர் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வேல்முருகன் என்ற இளைஞர் ஓட்டி வந்த கிரேன், சாலையில் திரும்பும் பொழுது அதன் முன்பக்கம் முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.



பின்னர் அந்த வாகனத்தின் டயர் முதியவர் மருத்தாசலம் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது நண்பர் மணிமாறன் என்பவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கிரேன் ஓட்டுநர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் முதியவர் மீது கிரேன் ஏறும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஆதரவின்றி இருக்கும் ஆடு மேய்க்கும் முதியவர் மருதாச்சலத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...