கோவை தொண்டாமுத்தூரில் தூக்கில் சடலமாக தொங்கிய தம்பதி - போலீசார் விசாரணை!

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அய்யாசாமி - வெண்ணிலா தம்பதி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது35). இவர் ஜெராக்ஸ் கடை மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை தகரறாகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (வயது30). 7 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதைடுத்து, அக்கம் பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதைடுத்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அய்யாச்சாமிக்கு ரூ 2.5 கோடி கடன் இருந்ததாகவும், அண்மையில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் பொருளாதார சிரமத்தில் இருந்து வந்ததாகவும், தற்கொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...