கோவை அருகே சாலையை சீரமைக்கக்கோரி திடீர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்துச் சென்றனர்.



கோவை: கோவை துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. 

அப்பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக, மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியும் ஆகி, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சங்கர் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் உள்ளதால், பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் மனு கொடுத்திருந்தனர்.



அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால், அந்த வழியாக சென்ற அனைத்து பள்ளி கல்லூரி வாகனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார், மண்டல அலுவலர் ஜோதி மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அவர்கள் உடனடியாக சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...