ஏப்.1 முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்வு? - பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. காருக்கு ரூ.5 முதல் ரூ.15-வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சுங்கச்சாவடிகளிலேயே நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டி இருந்ததோடு, காலவிரயமும் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணத்தை மத்திய அரசு ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிக்கான சுங்க கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இருக்கும் 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில், ஏப்ரல் 1ம் தேதி முதல்காருக்கு ரூ. 5 முதல் 15 வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் பரனுர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

சுங்கக்கட்டணம் உயர்ந்தால் சரக்கு வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரித்து, விலைவாசி உயர்வு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நடவடிக்கைக்கு லாரி உரிமையாளர் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...