கோவையில் பட்டப்பகலில் ஐடி ஊழியர் வீட்டில் புகுந்து மின்னணு சாதனங்கள் கொள்ளை!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ் என்பவர் வீட்டில், பட்டப்பகலில் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பதுபோல வந்த மர்ம நபர், அக்கம் பக்கம் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார்.

அதனடிப்படைதில் வீடுகளில் உள்ளவர்களிடம் விலாசம் கேட்ட அந்த மர்ம நபர், ஐடி ஊழியரான டோமினிக் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் இரவு பணி முடித்த நிலையில், அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அவரை எழுப்பாமல் அப்படியே நைசாக உள்ளே சென்று வீட்டிலிருந்த மின்னணு சாதனங்களான ஆப்பிள் மேக் மடிக்கணினி, டெல் அடாப்டர், உயர் ரக ஹெட்செட், வையர்லஸ் நெக் பேண்ட், ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச், பேக் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து நொடிப்பொழுதில் ஓட்டம் பிடித்தார்.



அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறிய அந்த மர்ம நபர், மருத்துவமனை செல்ல வேண்டும், அவசரமாக போங்க என்றார். பள்ளி செல்லும் வாகனம் என்பதால் மருத்துவமனை செல்ல முடியாது என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டார்.

அப்போது எங்கு செல்வதென்று தெரியாமல் மர்ம நபர் தடுமாறும் காட்சி வெளியாகி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. லேப்டாப் பேக்குடன் அந்த நபர் ஓடும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் தந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலிஸார் வழக்கு பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...