ஊட்டியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

அதிகளவு சத்து மாத்திரை சாப்பிட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஊட்டி உருது நடுநிலைப் பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இங்கு கடந்த கடந்த 6ம் தேதி 8ம் வகுப்பு மாணவிகள், அளவுக்கு அதிகமாக சத்துமாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். இதையடுத்து 4 மாணவிகள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 13 வயது சிறுமி மட்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் அருகே செல்லும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை ஒருவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சமும், சிகிச்சை பெற்றுவரும் 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...