பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம மக்களின் எதிர்ப்பை மீறி இந்த ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் முழுமையாக இந்து மக்கள் வாழும் நிலையில், இங்கே ஜெபக்கூடம் அமைப்பதற்கான காரணம் என்ன எனவும், தொழிற்சாலை கட்டுவதாக ஊராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டு ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும், ஆரம்பத்திலேயே இந்த இங்கு கட்டப்படும் கிறிஸ்துவ ஜெபக்கூடத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்லடம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெப கூடத்தை அகற்ற ஆதரவு தெரிவித்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...