திருப்பூரில் சாக்கடை கால்வாய் பணியால் சோகம் - சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

திருப்பூர் அருள்ஜோதிபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அருள்ஜோதிபுரம் பகுதியில்சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.



திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.



இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே தோண்டிய குழியின் இடைவெளியைக் கடக்க அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அபிராம் என்ற மாணவன், மரப்பலகையைக் குறுக்கே போடுவதற்கு முற்பட்டபோது, வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்குப் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...