காய்ச்சல், தலைவலி பாதிப்பு அதிகரிப்பு - வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் அதிகரித்ததை தொடர்ந்து, வால்பாறை, உருளிகல், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் 62 எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வால்பாறை, சோலையார் அணை பகுதியில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவமனை சார்பில், வால்பாறை, கக்கன் காலனி, உருளிகல் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



வால்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டாக்டர் சாமிநாதன் தலைமையிலும், கக்கன் காலனி பகுதியில் சித்தா டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலும், உருளிகல் எஸ்டேட் பகுதியில் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...