கோவை மத்தியச் சிறையில் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு

கோவை மத்தியச் சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கு சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் என 2200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நுாலகம் போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி காவல்துறை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், தண்டனை காலத்தினை முடித்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள் சுய தொழில் துவங்கும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம், கனரா வங்கி (முன்னோடி வங்கி) சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் ஆண்கள் சிறையில் ஏசி, வாசிங் மெஷின் பழுது பார்த்தல் பயிற்சி மற்றும் பெண்கள் சிறையில் சோப்பாயில், பெனாயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகளை இன்று சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வின் போது கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உதவி பொதுமேலாளர் திருமலை ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...