கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி மோசடி - ஜாமீனில் வெளிவந்தவர் கைவரிசை!

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் லட்ச கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீ சதுர்வேத கிரிநாதன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: அதிக லாபம் தருவதாக பொதுமக்களை ஏமாற்றியவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீ சதுர்வேத கிரிநாதன். பொறியியல் படித்த பட்டதாரியான இவர், ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் டச்சு வங்கியின் உயர் பொறுப்பை வைப்பதாகவும், கோவை ஆர்.எஸ்புரம் கிளையில் பணியாற்றுவதாகவும் ஆரம்பத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

டச்சு வங்கியில் தனது வழிகாட்டுதலின் கீழ் முதலீடு செய்தால் 36% வட்டி தருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.



ஸ்ரீ சதுர்வேத கிரிநாதன் வீசிய வலையில் சிக்கிய கோவையை சேர்ந்த முதியவர் ஒருவர், வசித்து வந்த வீட்டை அடகு வைத்து 16 லட்சம் ரூபாய் பணத்தை, ஸ்ரீ சதுர்வேத கிரிநாதனிடம் தந்து முதலீடு செய்யச் சொல்லி இருக்கின்றார்.

இந்நிலையில், முதல் இரண்டு மாதம் வட்டியை தந்து விட்டு, பின்னர் அந்த முதியவருக்கு ஸ்ரீ சதுர்வேத கிரிநாதன் பணம் தராமல் ஏமாற்றி இருக்கின்றார். இதனால் பணத்தை ஏமாந்தவர் குற்றப்பிரிவு போலீசில் சென்ற வருடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார்ர் விசாரணை நடத்திய நிலையில், ஸ்ரீ சதுவேத கிரிநாதன் டச்சு வங்கியில் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.



டச்சு வங்கியில் பணியாற்றுவது போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து நம்ப வைத்தது போலீசாருக்கு தெரியவந்தன. நூதன மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீ சதூர்வேத கிரிநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீ சதுர்வேத கிரிநாதன், ஹெர்குலின் சொல்யூஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக மற்றவர்களிடம் அறிமுகமாகி, அந்த நிறுவனத்தின் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 36% வட்டியும், பங்குச் சந்தையில் வரும் லாபத்தை பங்கு போட்டு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றார். அப்போது முதலீடு செய்ய முன்வந்த முதலீட்டாளரிடம் அலுவலக முகவரியை கேட்டிருக்கின்றனர். ஆனால் தான் தற்போதே அலுவலகத்தை காலி செய்து விட்டு, வீட்டிலிருந்து பணிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் ஒருவர் 25 லட்சம் ரூபாயை சதுர்வேத கிரிநாதனின் வங்கி கணக்குக்கு மாற்றி இருக்கின்றார். அவர் மட்டும் இன்றி அவரது உறவினர்களும், முதலீடு செய்யச் செய்திருக்கின்றார்.



முதலீட்டாளர்களுக்குப் போலியான ஒப்பந்த ரசீது தந்த சதுர்வேத கிரிநாதன், அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த செக் ஒன்றையும் தந்திருக்கின்றார்.

நிறுவனத்தின் தரப்பிலிருந்து செக் மற்றும் ஒப்பந்தம் ரசீது உள்ளிட்டவை தருவதனால், தயக்கமின்றி பணம் தந்துள்ளனர். முதலீடு செய்த முதல் மூன்று மாதம், முதலீட்டாளர்களுக்கு வட்டி சரியாக தந்த சதுர்வேத கிரிநாதன், பின்னர் முதலீட்டாளர்களுக்குப் பணம் தராமல் ஏமாற்றி இருக்கின்றார். இதனால் பணத்தை இழந்து பரிதவித்த முதலீட்டாளர்கள், போலீசில் புகார் அளித்தனர்.

சுமார் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 லட்சத்துக்கும் மேலாக ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் என்ற பெயரில் பணம் பெற்று மோசடியை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றபிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...