சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.6.55 லட்சம் மோசடி - கோவை சைபர் கிரைமில் இளைஞர் புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைனில் 6.55 லட்சம் வரையில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், பாதிக்கப்பட்ட கோவை சேரன்மாநகரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.


கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6.55 லட்சம் ரூபாய் இழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை சேரன் மாநகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (31). பொறியியல் படித்த பி.இ. பட்டதாரியான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வேலை தொடர்பாக தனது ப்ரஃபைலை ஆன்லைன் வெப் சைட்டுகளில் பதிவேற்றம் செய்து வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு வாட்ஸ் அப்பில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக, வெளிநாட்டு நம்பர் மூலம் மெசேஜ் வந்தது. அதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அந்த எண்ணை தொடர்பு கொண்டார். வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசிய அந்த நபர், சிங்கப்பூரில் வேலையில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பணியிலே சேர விசா, பிராசஸிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்து, ஒரு வருடத்தில் ரூ.6.55 லட்சம் ரூபாயை பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியவாறு வேலை வாங்கி தரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 419, 420 IPC & 66D IT Act சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், வேலையின்றி தவித்த இளைஞரை, ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...