பல்லடம் அருகே அண்ணமார் கோயிலில் படுகளம் சாய்தல் நிகழ்ச்சி - 21ஆண்டுக்குப் பின் நடந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் அண்ணமார் கோயிலில் நடைபெற்ற படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்கபுரம் கிராமத்தில் அண்ணமார் திருக்கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

கி.பி 1020-ம் நூற்றாண்டில் சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீரவரலாற்று படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்வு படுகளம் கன்னிமார் மற்றும் குளக்கரை கருப்பசாமி, மகாமுனி, பொன்னர் – சங்கர், தங்காள் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.



ராசா கவுண்டம்பாளையம், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.



பொன்னர் சங்கர் படுகள பாடலைக் கேட்டு ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஆங்காங்கே மருள் வந்து படுகளம் சாய்ந்தனர்.



இவர்கள் அண்ணன்மார் தெய்வங்களுடன் இணைந்து போரிட்டு மடிந்தவர்களாக பார்க்கப்படுகிறது.



அவர்கள் அனைவரும் போரிட்டு மடிந்தவர்களாக வரிசைப்படுத்தப்பட்டு, மாகாளியம்மன் ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தக்குடத்தினை சிறுமி ஒருவரிடம் கொடுத்து பின் மாண்டவர்களாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள் மீது தீர்த்தத்தை தெளிக்க அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்தது போன்ற நிகழ்வு நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு வீரப்பூரில் நடைபெறுவது போலவே 21 ஆண்டுகளுக்குப் பின் பல்லடம் அருகே மாணிக்கபுரத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...