கோவை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - கள்ளக்குறிச்சி நபர் கைது

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட ரூ-3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏர்அரேபியா விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நுண்ணறிவு மற்றும் வருவாய் புலன் ஆய்வு துறை அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளை சோதனையிட்டனர்.

அப்போது 11 பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தங்கத்தை கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

அந்த வகையில் ஷூ, ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 3.8 கோடி ரூபாய் ஆகும்.

தங்கம் கடத்தப்பட்ட விவகாத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் தங்க சங்கிலிகளாகவே கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...