தாராபுரத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன பகிர்மானக்குழு நிர்வாகிகள் தேர்வு - போட்டியின்றி தேர்வான தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கேயம், குண்டடம் பி.ஏ.பி. வாய்க்கால் பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், குண்டடம் ஆகிய பி.ஏ.பி. கால்வாய் பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தலை ஆர்.டி.ஓ.வும், தேர்தல் அதிகாரியுமான குமரேசன் தேர்தலை நடத்தினார். அதில், காங்கேயம் பகிர்மான குழு தலைவராக பச்சாபாளையத்தை சேர்ந்த கிராம தலைவர், பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல் குண்டடம் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு தலைவராக சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு உறுப்பினர்களாக 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி.ஓ குமரேசன் வெற்றிபெற்றதுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் நகரச்செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காங்கயம் நகர செயலாளர் வசந்தம். சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...