உடுமலையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வாங்கி தப்பியோட்டம்! - போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகை கடையில் கோயில் விழாவிற்கு தேவைப்படுவதாக கூறி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, பணம் கொடுக்காமல் பொருட்களோடு தப்பிய நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: உடுமலை கபூர்கான் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்டாலின். இவரது கடைக்கு வந்த ஒருவர், ஆதிபராசக்தி கோயிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்ததாக கூறியுள்ளார்.



இதையடுத்து, அவர் கொடுத்த லிஸ்ட்படி அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி, ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் பகுதியில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றார்.

அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர், மேலும் சில பொருட்களை தேவைப்படுவதாகவும், அவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மொத்தமாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, மளிகைக் கடைக்காரரும் கடைக்குச்சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.



ஆனால், அங்கே அந்த நபரை காணவில்லை. மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோயிலில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, வேறு சில கோயில்களுக்கு பொருட்களை பிரித்து கொடுத்துவிட்டு வருவதாக காரில் ஏற்றி சென்றதாக கூறியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அந்த நபரை காணவில்லை.



அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் இதுபற்றி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து நூதன முறையில் மளிகை பொருட்களை திருடிய டிப்டாப் ஆசாமியை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...