கோவையில் மே.27ம் தேதி ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி - டீசர், டிக்கெட் வெளியீடு

கோவை கொடிசியாவில் மே 27ஆம் தேதி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் முதல் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு டீசர் மற்றும் டிக்கெட்டுகளை வெளியிட்டார்.


கோவை: திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் நேரடி இசை நிகழ்ச்சி, மே 27 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ளது.

கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் வழங்கும் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியை எம்.கே என்டர்டைன்மென்ட் புரொடக்ஷன் ஏற்பாடு செய்துள்ளது.



இந்த நிகழ்ச்சிக்கான டீசர், டிக்கெட்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ சுவரொட்டி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு, டீசர் மற்றும் டிக்கெட் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.



அதனை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, இக்கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ஆதித்யா, எம்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.வி.மணிகண்டன் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர். 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பெயரிடப்பட்டுள்ள அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி மே 27 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி மலர்விழி, அனைவரின் சார்பாகவும் ஜி.வி.பிரகாஷ்குமாரை வரவேற்று, ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தில் இந்த இசை நிகழ்ச்சியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரியவராகவும், மென்மேலும் வளர வாழ்த்தி பேசினார்.



மேலும் இவர் பேசுகையில் மாணவர்கள் பல்வேறு திறன்களை இளம் பருவத்தில் வளர்க்க வேண்டும். படிப்புடன் பன்முக திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். வரும் வாய்ப்பை மாணவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். புதிய திறனை மாணவர்கள் வளர்க்க வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.கே. எண்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் பேசியதாவது, கோவையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதை பெருமையாக கருதுகிறோம். கோவை மக்களை மகிழ்விக்கும் வகையில், எம்.கே.என்டர்டைன்மென்ட் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற பல புதிய அறிவிப்புகள் வரும், என்றார்.

இதனையடுத்து மாணவர்களிடையே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது,



பொதுவாக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கச்சேரிகள் அறிவிக்கப்படும், ஆனால் இன்று மாணவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தான் எனக்கு எப்பொழுதும் வி.ஐ.பி.க்கள். ஏனெனில் மாணவர்களின் முன் நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த உற்சாகத்தை தருகிறது. அதேபோல் மாணவர்களின் முன் நிகழ்ச்சியினை நடத்தினால் நல்ல ஆற்றலையும் தருகின்றன.



பள்ளியிலும் கல்லூரியிலும் எப்பொழுதும் சராசரியான மாணவனாக இருந்துள்ளேன். பெற்றோர்களை ஆசிரியர்கள் அழைக்கும் வாய்ப்பை தராமல் நடந்து கொள்வேன். அதேபோல பல வாய்ப்புகளை இக்காலங்களில் சரியாக பயன்படுத்தி உள்ளேன். மாணவர்கள் சாதாரணமாக படியுங்கள். உங்கள் பன்முக திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்.



உங்கள் முன்னிலையில் இதை வெளியிட்டது எப்போதும் ஸ்பெஷல் தான், இசை நிகழ்ச்சியில் உங்கள் வரவுக்காக காத்திருப்பேன்.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...