உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டிய வாகனம் - விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம்!

உடுமலை அடுத்த பட்டிவீரன்பட்டியில் உள்ள குளத்தின் அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.6,000 அபராதம் விதித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தில் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள குளம் அருகே கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் காலாவதியான ஊசி, மருந்து, மாத்திரைகள், பவுடர் ஆகியவை மூட்டை மூட்டையாக கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகல் நேரத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை கண்ட விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகம் காலாவதியான மருந்துகளை விவசாய நிலங்களில் கொட்டிய மருந்து கம்பெனி நிறுவனத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ள நிலையில் குளம் அருகே ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு தினமும் விட்டு வருகின்றனர். இந்த நிலையில் காலாவதியான மருந்துகளை உட்கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

மேலும் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கும் அபாயம் இருந்த நிலையில் விவசாயிகள் தீவிரமாக கண்காணித்து இன்று மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.

ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக குறைந்தபட்சம் அபராத தொகை விதித்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...