தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 16 வழக்குகள் ரூ.56.88 லட்சத்திற்கு சமரசம் செய்யப்பட்டது.

வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான 16 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு ரூ.56.88 லட்சத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.



தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. இதில் வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தர்மபிரபுதலைமையில், மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

வழக்கறிஞர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 16 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.56,88,000. இதில் 30 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன் பெற்றனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பணியினை வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...