திருப்பூரில் மாநில அளவிலான காதி மற்றும் கிராம தொழில் ஆணைய கண்காட்சி - தொடங்கி வைத்த எம்.எஸ்.எம்.இ தலைவர்!

திருப்பூர் அடுத்த வாலிபாளையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மாநில அளவிலான கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் காதி மற்றும் கிராம ஆணையத்தின் மாநில அளவிலான கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சாலையில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் காதி கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரியின் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் துவங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்த விழாவில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே, இயக்குனர் ரித்தேஷ் குமார், மாநில இயக்குனர் பி.என். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...