அண்ணமலை உள்ளிட்ட பாஜகவினர் மீதான ஊழல் பட்டியலை சேகரித்து வெளியிட தயார்-ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தகவல்!

திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குனரும், திமுக பிரமுகருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தெரிவித்துள்ளார்.


கோவை: திமுக அரசு மற்றும் முதல்வர், தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குநரும் திமுக பிரமுகருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக அரசு மற்றும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் முக.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், அதுவும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அண்ணாமலை மற்றும் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற தவறான கருத்துக்களை பேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பு ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும்.

குறிப்பாக அண்ணாமலை, முடிந்தால் கைது செய்து பாருங்கள் என அரசுக்கு சவால் விடுக்கிறார். அதே போல தமிழக அமைச்சர்களையும் தரக்குறைவாக பேசுகிறார் அது ஏற்புடையது அல்ல. தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறுகிறார்.

இவர் கடந்த ஒரு வருடமாக இதை தான் கூறி வருகிறார். ஊழல் செய்தால் தானே ஆதாரம் இருக்கும். பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவர்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் குறித்தான ஆதரங்களை சேகரித்து வெளியிட தயார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...