கோவை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!


தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப் போய் உள்ளதாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வறட்சியானது பசுமை செழித்திருந்த கோவை மாவட்டத்தையும் சமீப காலமாக தாக்கி வருகின்றனது. அதன் படி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக இருந்த சிறுவாணி, அத்திக்கடவு, பவானி, ஆழியார் உள்ளிட்ட அணைகளுக்கு சரியான நீர் வரத்து இல்லாததாலும், பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததின் காரணத்தாலும் கோவையில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே இருக்கும் பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...